ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா அசதியுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் இந்திய அணி வில்வித்தைப் போட்டியில் இரண்டு தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது.
இன்று ஆண்களுக்கான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக ஓஜாஸ், அபிஷேக், பிரதாமேஷ் ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்தியாவுக்கு எதிராக கொரியாவின் ஜேஹூன் ஜூ, ஜேவோன் யாங், ஜோங்ஹோ கிம் ஆகியோர் விளையாடினர்.
இதில் முதல் சுற்றில் இருந்தே இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. முதல் சுற்றின் முடிவில் இந்தியா 58-55 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று முன்னிலை வகித்தது.
இரண்டாவது சுற்றில் கொரிய தனது விளையாட்டை ஆரம்பித்ததால் இந்த சுற்றில் 58-59 என்ற செட் கணக்கில் கொரிய வென்றது.
தங்கத்தை வெல்லப் போவது யார் என்று தீர்மானிக்கும் மூன்றது சுற்றில் இந்தியா 59-57 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றது.
மொத்தமாக இந்திய அணி 235-230 என்ற கணக்கில் போட்டியில் வெற்றிப் பெற்று தங்க பதக்கத்தை வென்றது. இதற்கு முன்பு இன்று நடைபெற்ற மகளிருக்கான வில்வித்தைப் போட்டியிலும் இந்திய பெண்கள் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.