மாஸ்டர் படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் ‘லியோ’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் 19 -ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழா இரத்தானது இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘லியோ’ படக் குழு தினமும் அப்டேட்களை அள்ளித் தெளித்த வண்ணமிருக்கின்றனர்.
மேலும், இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த படக்குழுவினர் அசந்துபோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் பற்றிய ட்வீட்கள் தீயாய்ப் பரவி வந்தன. இந்நிலையில் கோலிவுட் இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் வெளியான 30 நிமிடங்களில் 3 மில்லியன் வியூஸ்ஸை பெற்றுள்ளது.
திரையரிங்கில் ட்ரைலரை பார்த்த இரசிகர்கள் உற்சாகத்தில் திருவிழாவைப் போல் கொண்டாடி வருகின்றனர்.