புன்னகை என்பது எந்தவிதமான ஓசையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடாகும்.
உலகம் முழுதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது. இப்படிப்பட்ட புன்னகையை கொண்டாட உலக புன்னகை தினம் உள்ளது.
உலக புன்னகை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு முதல் உலக புன்னகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புன்னகை தினத்திற்கு ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படும். அதுபோல இந்த ஆண்டின் கருப்பொருள் ” ஒரு கருணைச் செயலைச் செய்யுங்கள். ஒருவர் சிரிக்க உதவுங்கள் ” என்பதாகும்.
உலக புன்னகை தினம் அன்பான புன்னகையையும் கருணையின் வெளிப்பாட்டையும் காட்டுவதற்காக அறிவிக்கப்பட்டது. ஸ்மைலி முகம் சின்னத்தின் உண்மையான அர்த்தத்தை மீண்டும் கொண்டு வர இந்த நாள் அறிவிக்கப்படுகிறது.
தோல்வி நம்மை சுற்றி சுற்றி வந்தாலும், புன்னகையை என்னும் ஆயுதத்தை கைவசம் வைத்துக் கொண்டால் தன் நம்பிக்கை தானாய் வரும். புன்னகையால் எதையும் வெல்வோம்.