இன்ஸ்டாகிராம் தொடங்கி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு செயலியாக இருப்பது இன்ஸ்டாகிராம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்க மறந்தாலும் இன்ஸ்டாகிராம் உள்ளே சென்று ரீல்சும், மீம்ஸும் பார்க்க மறக்காத அளவிற்கு இந்த செயலி அத்தியாவசியமான ஒரு செயலியாக உள்ளது.
2010ஆம் ஆண்டு புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள முன்னாள் கூகுள் ஊழியரான சிஸ்ட்ரோம் மற்றும் பிரேசிலிய மென்பொருள் பொறியாளர் க்ரீகர் ஆகியோர் இணைந்து காட்சி கதைசொல்லலில் கவனம் செலுத்தும் தளத்தை உருவாக்கும் வகையில் ஒரு தளத்தை கட்டமைத்தனர். புகைப்படங்களைப் பகிரும் செயல்முறையை எளிதாக்கும் மற்றும் மேம்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலியை உருவாக்கினர்.
சிஸ்ட்ரோம் முதலில் ஒரு நாயின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். 2012ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் கண்ணில் பட்டவுடன் இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மார்க் வாங்கினார்.
பின்னர் இந்த செயலி விரைவில் பிரபலமடைந்தது, தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான பயனர்களை ஈர்த்தது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை கொண்ட இந்த செயலியில் பிரபலங்கள், வணிகத் தளங்கள், மற்றும் அன்றாட தனிநபர்கள் உட்பட பல்வேறு பலதரப்பட்ட நபர்கள் இன்ஸ்டாவை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் வளர்ந்தவுடன், அதன் அம்சங்களின் வரம்பும் அதிகரித்தது. வீடியோ பகிர்வு, கதைகள், ஐஜிடிவி மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் ஆகியவற்றின் சேர்க்கை அதன் திறன்களை விரிவுபடுத்தியது, இது தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்கான பன்முக தளமாக மாறியுள்ளது.
இன்று அனைவரின் தொலைபேசியிலும் அதியவாசியாக இருக்கும் இந்த இன்ஸ்டாகிராமில் நாம் பலருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்போம் தற்போது அந்த இன்ஸ்டாக்ராமுக்கே பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம்.