ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் இந்திய அணி பதக்கங்களை வென்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றோரு பதக்கத்தை வென்றுள்ளது.
இன்று ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் பங்குப் பெற்றார்.
இதில் இந்திய வீரர் அமன் சீன வீரரான மிங்கு லியுவுடன் விளையாடினர். ஆரம்பத்திலிருந்தே அசத்தலாக விளையாடி வந்த அமன் 11-0 என்ற கணக்கில் மிங்குவை தோற்கடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 76 கிலோ எடை பிரிவில் இந்திய அணி சார்பாக கிரண் பங்குபெற்றார். இவருடன் மங்கோலியாவின் அரிஞ்சர்கல் கன்பத் விளையாடினர்.
இருவருக்கும் இடையே நடைபெற்றப் போட்டியில் இந்திய அணியின் கிரண் 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 62 கிலோ எடை பிரிவில் இந்திய அணியின் சார்பாக சோனம் மாலிக் பங்குபெற்றார். இவருடன் சீன அணியின் லாங் ஜியாவிடம் விளையாடினார்.
இதில் இந்திய அணியின் சோனம் மாலிக் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.