புதுதில்லியில் பூசாவில் உள்ள என்.ஏ.எஸ்.சி வளாகத்தில், ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை, நியாயமான மற்றும் நெகிழ்வான விவசாய உணவு முறைகளை நோக்கி என்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டைத் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபர் 9, 2023 அன்று தொடங்கி வைக்கிறார்.
சி.ஜி.ஐ.ஏ.ஆர் பாலின தாக்க மேடை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) ஆகியவை இந்த நான்கு நாள் மாநாட்டை நடத்துகின்றன.
இந்த மாநாடு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.ஏ.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹிமான்ஷு பதக், சமீபத்திய ஜி 20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த மாநாடும் அதன் கருப்பொருளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.