சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணி 5-1 என்ற கணக்கில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
இன்றைய ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி அபாரமாக ஆடியது. தாக்குதல் ஆட்டத்தை ஆடிய இந்திய அணியை தடுக்க முடியாமல் ஜப்பான் அணியினர் தடுமாறினர். இதையடுத்து, 5-1 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலமாக இந்திய அணி ஹாக்கியில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது, இந்தியாவிடம் தோல்வியடைந்த ஜப்பான் வெள்ளிப்பதக்கத்தை தவறவிட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் பதக்க வேட்டையும் இதன்மூலம் உயர்ந்துள்ளது. இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் இதுவரை 22 தங்கம், 34 வௌ்ளி, 39 வெண்கலம் என 95 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்னும் போட்டி முடிய 2 நாட்கள் இருப்பதால் இந்திய அணி நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை கடப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தொடரில் சீனா 185 தங்கம், 104 வெள்ளி, 59 வெண்கலம் என 348 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 44 தங்கம், 55 வௌ்ளி மற்றும் 60 வெண்கலம் என 159 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. கொரியா 36 தங்கம், 47 வெள்ளி, 3 வெணகலம் என மொத்தம் 166 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.