தமிழக ஆளுநருடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் ஃபிலிப் கிரீன் ஓஏஎம் சந்தித்தார். அப்போது, முக்கிய விசயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள சென்னை ராஜ் பவனில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் ஃபிலிப் கிரீன் ஓஏஎம் மற்றும் சென்னையில் உள்ள தலைமை துணைத்தூதர் சாரா கிர்லியூ சந்தித்து பரஸ்பர நலன்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் திரு. ஃபிலிப் கிரீன் ஓஏஎம் மற்றும் சென்னையில் உள்ள தலைமை துணைத்தூதர் சாரா கிர்லியூ அவர்கள் சென்னை ராஜ் பவனில் சந்தித்து பரஸ்பர நலன்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.