தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 7, 2023, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது, 12,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குக் கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 15 -ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்திற்கு உறுதியாகத் தண்ணீர் தரமுடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் எனக் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

இதனால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசைக் கண்டித்து, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முழு வீச்சில் போராட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, போராட்டத்தை முடக்கும் வகையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் ரகசியமாக ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: tamilnadukarnatakaCauvery issue
Share
Tweet
SendShare
Previous Post

சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?

Next Post

தமிழக ஆளுநருடன் ஆஸ்திரேலியா தூதர் திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies