சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?
Sep 12, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?

22,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்திருக்கிறது. அதேசமயம், 23 இராணுவ வீரர்கள் உட்பட 103 பேரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2-ம் தேதி மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 3-ம் தேதி நள்ளிரவுக்கு மேல், வடக்கு பகுதியான லாச்சென் பள்ளத்தாக்கில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, லோனாக் ஏரியின் கரை உடைந்து டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் இருபுற கரைகளையும் உடைத்துக் கொண்டு சீறிப் பாய்ந்த வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்தது.

மேலும், வெள்ளத்தால் சுங்தாங் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, அணையின் கீழ் பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தால் காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. இந்நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அதேபோல, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்து விட்டன. ஏராளமான வீடுகளில் பாதியளவு சேதமடைந்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர, 23 இராணுவ வீரர்கள் உட்பட 103 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும், மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

மழை, வெள்ளத்தால் 22,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை சுமார் 2,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி நிவாரணமாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

Tags: sikkimFloods
Share
Tweet
SendShare
Previous Post

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!

Next Post

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies