ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாளை (செப் 11) முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “சங்கத்தின் பிரச்சாரகராகத் தொடங்கி சர்சங்கசாலக் நிலையை அவர் அடைந்த பயணம், தேச சேவை, சமூக நல்லிணக்கம் மற்றும் இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு இணையற்ற உதாரணம் என தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகப் பணியாற்றிய காலத்தில், சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்காக பகவத் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
“சர்சங்கசாலக் என்ற முறையில், சேவை, நற்பண்புகள் (சம்ஸ்கார்) மற்றும் நன்னெறி உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆர்எஸ்எஸ்-இன் முன்னெடுப்புகள் மூலம், சமூகத்தில் ‘தேசம் முதலில்’ (Nation First) என்ற உணர்வை அவர் வலுப்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் என அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
















