செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ. தொழில்நுட்பம், இருமுனை வாள் போன்றது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய இளைஞர்கள் தொழில்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்வதாக கூறினார்.
இது, 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வேகத்தை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு ஒரு இருமுனை வாள் போன்றது என குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது மோசடிகளைக் கண்டறியவும், அதே சமயம் மோசடிகளைச் செய்யவும் உதவுகிறது என்று கூறினார்.
















