நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை படைத்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் வகையில், எச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெற்றோரின் அனுமதியுடன் 14 வயது சிறுமியருக்கு ‘கார்டசில் – 4’ என்ற ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுவரை 80 லட்சம் சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















