அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 12, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் பிரிக்ஸ் கொள்கை எதுவென்று கேட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, அதே சமயம் மேற்கத்தியம் சாராதது என்ற கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த வெளியுறவுத்துறை கொள்கை இன்றைய புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாறி வரும் உலக அரங்கில் தனது தனித்துவமான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்தும் இந்தியா, எல்லோருக்குமான மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியைத் தனது நோக்கமாக கொண்டுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒரு போர்க்களமாகவோ, பனிப்போர் காலத்து அமைப்பாகவோ மாற்ற விரும்பாத இந்தியா, பிரிக்ஸ் அமைப்பின் நோக்கம் உலகளாவிய தெற்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே தவிர, மேற்கத்திய நாடுகளுடன் மோதலில் ஈடுபடுவது அல்ல என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.

உண்மையிலேயே மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கமோ அந்நாடுகளின் வழிகாட்டுதலோ இல்லாத, வளரும் நாடுகளின் தனித்துவமான தளமாக பிரிக்ஸ் விளங்குகிறது.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானதாக மாற்ற முயன்றாலும், இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டின் மூலம் பிரிக்ஸ் அமைப்பை ஒரு தூய பொருளாதார மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகவே தக்கவைக்க பாடுபடுகிறது.

உலக அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல், பல உலகளாவிய சக்திகள் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியா, மேற்கத்தியம் சாராத ஒரு நாடாக இருந்து கொண்டே மேற்கத்திய நாடுகளுடன் மிக வலுவான உறவைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது.

இந்தியாவின் அணுகுமுறை என்பது அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் (revisionist) நோக்கத்தைக் கொண்டதல்ல, மாறாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் தன்மையைக் கொண்டதாக அமைந்துள்ளது.

அதனால் தான் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் குவாட் அமைப்பில் உறுப்பினராக இருப்பதோடு, ரஷ்யா மற்றும் சீனாவுடன் பிரிக்ஸ் அமைப்பிலும் ஒரு தீவிர உறுப்பினராக இந்தியாவால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பரந்த உலக தெற்குப் பகுதி நாடுகளுடனான சீரான உறவுகளையும் இந்தியா பேணி வருகிறது.

முன்னதாக 2023 ஆகஸ்ட்டில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், வெற்றிபெற்ற டிஜிட்டல் இந்தியாவின் உள்கட்டமைப்பு விஷயங்களை பிரிக்ஸ் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, 2024-அக்டோபரில் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உள்ளூர் நாணயங்களில் பிரிக்ஸ் நாடுகளின் தடையற்ற எல்லை தாண்டிய வர்த்தகம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பிரிக்ஸ் என்பது தனிப்பட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமான அமைப்பு அல்ல. மாறாக தீர்க்கமான முடிவுகளை மையமாகக் கொண்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு சர்வதேச தளம் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக மேற்கத்திய சக்திகளுடன் முழுமையாக அணிசேர்வது அல்லது அவர்களுக்கு எதிராக ஒரு எதிர் அணியை உருவாக்குவது ஆகிய இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ‘குளோபல் சவுத்’ நாடுகளுக்கு இல்லை என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை என்ற பிரதமர் மோடியின் புதிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது.

 

Tags: brics paybrics venuebrics 2026brics chinabrics vs g7trump bricsbrics newsusa vs bricsbrics liveindia bricsmodi bricsbrics indiabrics 2024brics delhibricscbdc bricsBRICS summiteeuu bricsupi bricsputin bricspib bricsbrics trade
Share
Tweet
SendShare
Previous Post

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Related News

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies