கிராமங்களில் வாழும் இந்து மக்களை குறிவைத்து கிறிஸ்துவ மிஷனரிகள் மதம் மாற்றம் செய்து வருகின்றது. கல்வி தருகிறோம், மருத்துவ உதவி செய்கிறோம், வேலை வாய்ப்பு தருகிறோம், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, வறுமையில் இருப்பவர்களை மதம் மாற்றம் செய்வது கடந்த பல வருடங்களாகவே நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் வட மாநிலங்களில் மத மாற்றம் என்பது நிறைய கூலாகவே நடந்து வருகிறது. அப்படித்தான் ஒரு டிப்டாப் ஆசாமியும், இரண்டு பெண்களும் தங்களது தந்திரத்தைப் பயன்படுத்தி, கிராம மக்களை அணுகியுள்ளனர்.
முதலில் அவர்களது தந்திரம் புரியாமல் தவித்தவர்கள் பின்னர், விழித்துக் கொண்டு, கேள்விக்கணைகளால் துளைத்துத்தெடுத்தனர். ஒரு கட்டத்தில், அங்கிருந்த மூதாட்டி ஒருவர் தனது காலில் போட்டிருந்த செருப்பைக் கழட்டி அவர்கள் மீது ஆவேசமாக வெறி கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டனர்.
வசமாகச் சிக்கிக் கொண்டுவிட்டோம் எனத் தெரிந்ததும், மன்னிப்புக்கேட்டு அந்த கும்பல் போராடியது. ஆனாலும், ஆவேசத்தின் உச்சத்திலிருந்த கிராம மக்கள் மத மாற்றத்தை மன்னிக்கத் தயாராக இல்லை.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, மத மாற்றம் என்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. ஆனால், அதையும் தாண்டி, சிலர் குறுக்கு வழியில் மத மாற்றம் செய்யும் குற்றத்தை ரகசியமாகவே செய்து வருகின்றனர். இனி, பாரத நாட்டில் இந்துக்களை மத மாற்றம் செய்வது சாத்தியமே இல்லை என்பதே இந்த செருப்படி சம்பவம் உணர்த்துகிறது.