ஆதித்யா எல்-1 செயல்பாடு "சூப்பர்": இஸ்ரோ இன்ப அதிர்ச்சி!
Aug 15, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1 செயல்பாடு “சூப்பர்”: இஸ்ரோ இன்ப அதிர்ச்சி!

சரியான பாதையில் பயணிப்பதாக தகவல்!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு சூப்பராக இருப்பதாகவும், தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி.-சி 57 ராக்கெட் உதவியுடன், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விண்கலம் 4 மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. துாரமுள்ள ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1’ என்கிற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடியே சூரியனை ஆய்வு செய்யும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம் 15 கோடி கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இதுவரை 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது 5-வது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, இஸ்ரோ தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. மேலும், ஆதித்யா தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதாவது, சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது.

ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் 6-ம் தேதி 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்தன” என்று தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகளையும் சேகரிக்கத் தொடங்கி இருக்கிறது. STEPS (Supra Thermal and Energetic Particle Spectrometer) கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கி.மீ. தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கி இருக்கின்றன. இந்தத் தரவு பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditya-L1 Mission:
The Spacecraft is healthy and on its way to Sun-Earth L1.

A Trajectory Correction Maneuvre (TCM), originally provisioned, was performed on October 6, 2023, for about 16 s. It was needed to correct the trajectory evaluated after tracking the Trans-Lagrangean…

— ISRO (@isro) October 8, 2023

 

Tags: ISROAadhitya L-1
ShareTweetSendShare
Previous Post

உத்தராகண்டில் ரூ.4,194 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி!

Next Post

இஸ்ரேல் மீதான தாக்குதல்: அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம்!

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies