இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை முதல் 12-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார்.
இரு நாடுகளின் பயணத்தின் முதல் கட்டமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரோம் நகரில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குய்டோ க்ரிசெட்டோவை சந்திக்க உள்ளார்.
இரண்டாவது மற்றும் இறுதி கட்டத்தின் போது, ராஜ்நாத் சிங் தனது சகாவான பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவுடன் 5 ஆவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
ரோம் மற்றும் பாரிஸ் ஆகிய இரு நகரங்களிலும் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பரஸ்பர ஒத்துழைப்பிற்கான சாத்தியமான வாய்ப்புகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொள்கிறார்.