வட அமெரிக்காவில் முதல் காந்தி அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
அமைதியின் தூதரான மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திற்க்காக அர்ப்பணிக்கப்பட்ட வட அமெரிக்காவில், முதல் காந்தி அருங்காட்சியகம் வேண்டும் என்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கனவு, இறுதியாக நினைவாகி அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டனில் பொதுமக்களுக்கு காந்தி அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
நித்திய காந்தி அருங்காட்சியகம் அமெரிக்காவில் உள்ள காந்தி தொடர்பான அருங்காட்சியகமாகும், இது மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வன்முறை மோதல் தீர்வுகான அவரது நிரந்தர மரபைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உள்ளது. இந்த அருங்காட்சியகம் அதிகார பூர்வமாக ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. அனால் மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று பிரமாண்டமாக திறப்பு விழா நடைபெற்றது.
அரை வட்ட வடிவ அருங்காட்சியகத்தின் வெளிப்புற சுவர்கள் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பெட்டி வில்லியம்ஸ் உட்பட பலரை சித்தரிக்கின்றன. மேலும் அருங்காட்சியகத்தின் முன் மகாத்மா காந்தியின் சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.