தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு பேருந்துகளில் அக்டோபர் 9-ம் தேதி முதல் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தீபாவளி பண்டியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பெரும்பாலான பொது மக்கள் வெளியூர் பயணம் என்றாலே, அவர்கள் தேர்வு செய்வது இரயில் பயணம் மட்டுமே. ஆனால், இரயிலில் 90 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டதால், தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பயணிகள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் வகையில், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், சேலம், உள்ளிட்ட ஊர்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதே போல, சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பி வரவும், ஆக மொத்தம் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில், 1,800 பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகள் ஆகும்.
அதன்படி நவம்பர் 7-ம் தேதிக்கு அக்டோபர் 8-ம் தேதியும், நவம்பர் 8 -ம் தேதிக்கு, அக்டோபர் 9-ம் தேதியும், நவம்பர் 9-ம் தேதிக்கு அக்டோபர் 9-ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.