ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று ஹைதராபாத்தில் விளையாடவுள்ளது.
2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத் ராஜுவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடுகிறது.
நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்துப் போட்டியில் நெதர்லாந்து அணி தோல்வியடைந்து.
நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒருநாள் போட்டியில் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், நியூசிலாந்து அணியே அனைத்திலும் வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் உலகக்கோப்பைப் போட்டியில் இவ்விரு அணிகளும் ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளது.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில்க் நெதர்லாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பையில் பங்குபெற்றது. வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 307/8 என்ற அபாரமான ரன்களைக் குவித்தது. அதன் பிறகு நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 188/7 எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
நியூசிலாந்து-நெதர்லாந்து உலகக் கோப்பையின் தற்போதைய பார்ம் மற்றும் இரு அணிகளின் தலைசிறந்த சாதனைகளைப் பார்த்தோமேயானால், நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி நெதர்லாந்துக்கு எதிரான ஐந்தாவது வெற்றியை எதிர்பார்க்கிறது. இருப்பினும், கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி விளையாடிய விதத்தை பார்த்தால் இன்றைய போட்டி சுவாரஸ்யத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.