தமிழக சட்டப்பேரவையிலிருந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது, சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி நதிநீர் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதனால், காவிரி விவகாரம் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் முழுமையானதாக இல்லை எனக் கூறி தமிழ்நாடு சட்டப் பேரவையிலிருந்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.