காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்த விமானம் தாங்கி நாசக்காரக் கப்பலை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பி இருக்கிறது. இக்கப்பலில் ஏராளமான போர் விமானங்களும், 5,000 போர் வீரர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை அறிக்கப்படாத போரில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகளை செலுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்நாட்டுக்குள் ஊடுருவி கண்ணில் கண்ட மக்களை எல்லாம் குருவிகளைச் சுடுவதுபோல சுட்டு வெறியாட்டம் போட்டனர். இது தவிர, ஏராளமான அப்பாவிப் பொதுமக்களையும், இஸ்ரேல் இராணுவ வீரர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.
இஸ்ரேல் மீதான இந்த அறிவிக்கப்படாத போரை கண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சனிக்கிழமையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் என்றும், தேவையான ஆயுத உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்றும் தெரிவித்திருந்ததாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலான ஜெரால்டு ஆர்.போர்டு என்ற போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த போர்டு கேரியர் போர்க் கப்பலில் 5,000 வீரர்கள் இருக்கிறார்கள். மேலும், பலவகை அரியவகை விமானங்களும் இருக்கின்றன. இந்த போர் விமானங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை. மேலும், பயங்கரவாதிகளுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குபவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருக்கும்.
வெர்ஜீனியாவை தளமாகக் கொண்ட இந்த விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய தரைக்கடலில் நின்றிருந்து. இது தற்போது இஸ்ரேல் நோக்கி விரைந்திருக்கிறது. இக்கப்பலில் யு.எஸ்.எஸ். நார்மண்டி, யு.எஸ்.எஸ். தாமஸ் ஹட்னர், யு.எஸ்.எஸ். ராம்பேஜ், யு.எஸ்.எஸ். கார்னி, யு.எஸ்.எஸ். ரூஸ்வெல்ட் மற்றும் எஃப்-35, ஏபி-15, எஃப்-16 மற்றும் ஏ-10 போர் விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அமெரிக்காவின் இந்த அதிநவீன போர்க் கப்பலுக்கு நாசக்காரக் கப்பல் என்று பெயர்.
காரணம், எதிரிகளின் இலக்குகளை நாசமாக்கும் சக்தி கொண்டது. தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை குறிவைத்து துல்லியமாகத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் இக்கப்பலில் இருக்கின்றன. மேலும், இக்கப்பலில் அதிநவீன கண்காணிப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், அமெரிக்க கப்பல் படை எதிரிகளை துல்லியமாக கணித்து தாக்குதல்களை நடத்தும். இக்கப்பல் இஸ்ரேல் சென்றதும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.