நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட விபத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் விரகாலூர் பகுதியில், நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட விபத்தில், 7 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
அரியலூர் மாவட்டம் விரகாலூர் பகுதியில், நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட விபத்தில், 7 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்து…
— K.Annamalai (@annamalai_k) October 9, 2023
அவர்கள் குடும்பத்தினருக்கு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திக்கிறேன். அனைவர் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.