காவிரி விவகாரம்: திமுக இரட்டை நிலைப்பாடு - வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!
May 20, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: திமுக இரட்டை நிலைப்பாடு – வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையானதாக இல்லை என்றும், காவிரி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டு நாடகம் ஆடுவதாகவும், அதன் காரணமாகவே, தமிழக சட்டப் பேரவையில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப் பேரவை வளாகத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்குச் செல்கிறார். அங்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். பேசுகிறார். எனவே, தனது நட்பு, கூட்டணி பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழகத்துக்குத் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை.

நதிநீர் தாவாக்களின்படி, பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஏதுவாக இருந்தாலும், சட்டத்தின்படி அந்த மாநிலத்திற்கான நீரைப் பெற வேண்டும். அதற்காகக் கொண்டுவரப்பட்ட, மசோதா அணை பாதுகாப்பு மசோதா.

நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்தபோது, மாநில சுயாட்சி என்று கூறி அதை திமுக எதிர்த்தது. ஆனால், தற்போது கர்நாடகாவில் நீரைப் பெற்றத்தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதுதான் திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு.

தமிழகத்தின் நீர் உரிமைக்காக பாஜக என்றும் குரல் கொடுக்கும். கடந்த 5 ஆண்டுகளில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியிலிருந்த போது இது போன்ற ஒரு சூழல் எழவில்லை. 5 வருட காலம் பாஜக அரசு இருக்கும்போது இதுபோல எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடனே இது போன்ற பிரச்சினை வருகிறது.

திமுகவும், காங்கிரஸும் பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். காவிரி நீரைக் கூட பெற்றுத்தர முடியாதவர்கள், பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள்? எனவே, மக்களை ஏமாற்றவே இந்த தீர்மானம். எனவே, தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மூலம் நிரந்தர தீர்வு காண முடியாது. எனவே, தமிழகத்தின் உண்மையான நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழு அக்கறையுடன் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

Tags: vanathi srinivasan bjpbjp
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தை தூள்தூளாக்கிய இஸ்ரேல் விமானப்படை!

Next Post

புழல் சிறையில் மீண்டும் செந்தில் பாலாஜி – நடந்தது என்ன?

Related News

மீஞ்சூர் பேரூராட்சியில் ஒரு வார்டுக்கு மட்டும் சுமார் 6 கோடி மதிப்பிலான டெண்டர் – மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்!

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

யார் அந்த தம்பி? – ரூ. 1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாக உயர்வு!

மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

விஷாலுடன் திருமணம் – நடிகை சாய் தன்ஷிகா அறிவிப்பு!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies