கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
விரைவில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, கடந்த அக்டோபர் 7-ம் தேதி அன்று, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் வந்து இறங்கின. அட்டைப் பெட்டிகளிலிருந்த பட்டாசுகளை ஒவ்வொன்றாக இளைஞர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர்.
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 9, 2023
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், பட்டாசுகள் வெடித்து சிறியது. இதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் பலியானார்கள். இந்த நிலையில், இந்த வழக்கு சிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கர்நாடக மாநிலம் அத்திருப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.