உலகக் கோப்பைத் தொடரின் 7 வது போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 7 வது போட்டி தர்மஷாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கியுள்ளனர்.
ஜானி பேர்ஸ்டோவ் 8 பௌண்டரீஸ் அடித்து 54 பந்துகளில் அரைசதமும், டேவிட் மாலன் 9 பௌண்டரீஸ் 45 பந்துகளில் அரைசதமும் அடித்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
17 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 112 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறது.