ரயில்வே துறையில் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் பாஜக ஆட்சியில் புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த திட்டம்தான் அம்ரித் பாரத்.
இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையம் சுற்றுப்புறப் பகுதிகள், காத்திருப்பு கூடங்கள், கழிப்பறைகள், லிப்ட், எஸ்கலேட்டர்கள், தூய்மைப் பணி, இலவச வைஃபை போன்றவை மேம்படுத்தப்படும்.
நகரின் இருபுறமும் உள்ள நிலையத்தை ஒருங்கிணைத்தல், ஊனமுற்றோர் வசதிகள், நிலையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இவை மட்டுமல்லாது, உள்ளூர் தயாரிப்புகளை பொது மக்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்காக நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் தேர்வாகியுள்ளன. கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 24, வடக்கு ரயில்வேயில் 80, வடமத்திய ரயில்வேயில் 21, வடகிழக்கு ரயில்வேயில் 34, வடமேற்கு ரயில்வேயில் 26, தெற்கு ரயில்வேயில் 48 எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தெற்கு மத்திய ரயில்வேயில் 64, தென்கிழக்கு ரயில்வேயில் 22, தென்கிழக்கு ரயில்வேயில் 11, தென்மேற்கு ரயில்வேயில் 22, மேற்கு ரயில்வேயில் 45, மேற்கு ரயில்வேயில் 20, மேற்கு மத்திய ரயில்வேயில் 20 எனத் தேர்வாகியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 73 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவை, ஜோலார்பேட்டை, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகர்கோவில், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், அரக்கோணம், செங்கல்பட்டு இரயில் நிலையங்கள் இதில் அடங்கும்.
தற்போது, மேலும் 15 இரயில் நிலையங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் என்றும், ஒரு சட்டசபைக்கு ஒரு இரயில் நிலையம் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.