குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மதில்தாணி என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெருவித்து வந்தாலும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்துள்ளதால் தக்க நடவடிக்கை எடுக்க -மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ,அதுபோல செல்போன் டவர் அமைக்க முறையான அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் பொதுமக்களிடம் நடந்த பேச்சு வார்த்தையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியை விட்டு சென்றனர்.
மேலும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையெழுத்துக்கள் போட்டு மீண்டும் புகார் அளிக்க உள்ளனர்.இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்களை ஒன்று கூட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.