நடிகை நயன்தாராவும், அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனும் நடுரோட்டில் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் இரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தான். திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் குறையாத காதலுடன் இந்த ஜோடி வலம் வருகிறது. குறிப்பாக கல்யாணத்துக்கு பின்னர் பல்வேறு பிசினஸில் முதலீடு செய்து, தொழிலதிபர்களாக வலம் வருகின்றனர் நயன், விக்கி ஜோடி.
தங்களது மகன்களின் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் மலேசியா சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவில் நடு ரோட்டில் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது காதல் மனைவி நயன்தாரா உடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நடு ரோட்டில் இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
அந்த புகைப்படங்களை பதிவிட்டு தான் எழுதிய நான் பிழை பாடலில் இடம்பெற்ற ‘அவளோடிருக்கும் ஒருவித சினேகிதன் ஆனேன்’ என்கிற வரிகளை கேப்ஷனாக கொடுத்துள்ளார் விக்கி.