உலகக் கோப்பைத் தொடரின் 8 வது போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 8 வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜுவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்க மற்றும் குஷால் பெரரா ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடி வந்த நிசங்க 7 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து மொத்தமாக 61 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஷதாப் கானின் பந்தில் ஆட்டமிழந்தார். குஷால் பெரரா ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்தில் டௌட் அவுட் ஆகினார்.
இவர்களை தொடர்ந்து குஷால் மெண்டிஸ் மற்றும் சதீரா களமிறங்கினர். இதில் குஷால் மெண்டிஸ் 8 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்து விளையாடி வருகிறார்.
சதீரா 13 பந்துகளில் 13 ரன்களை எடுத்து 100.00 ஸ்ட்ரிக் ரேட்வுடன் விளையாடி வருகிறார். இப்போது வரை இலங்கை அணி 20 ஓவர்களில் 143 ரன்களை எடுத்துள்ளது.