புது டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதன்படி, நவம்பர் 7, 17, 23, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், புது டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 5 மாநில தேர்தல் குறித்து ஆலோனைச் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சில முக்கிய விசயங்கள் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.