திமுகவைக் கண்டித்து பாஜக உண்ணாவிரதம் - அண்ணாமலை அறிவிப்பு!
Oct 26, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவைக் கண்டித்து பாஜக உண்ணாவிரதம் – அண்ணாமலை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 11, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் திமுகவைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 16-ம் தேதி கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018 -ம் ஆண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த 5 ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்குக் காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

தனது கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று சொல்லி, ஒரு கண்துடைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தனது வழக்கமான தீர்மான நாடகத்தை திமுக திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறது.

சட்டசபை விவாதத்தில், அத்தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியபோது, அவரை முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பைத் தடை செய்வதும் ஜனநாயகப் படுகொலையாகும்.

சட்ட மன்றத்தில் திமுகவின் வரலாற்றுப் பிழைகளும், ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் அனைத்தும் வெளிவந்துவிடுமோ என்ற பதட்டம் தான் தெரிந்ததே தவிர, விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு. அணைக் கட்டும் பிரச்சினை, கடந்த 50 ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சனைகளும், திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயலாமல், வீண் நாடகமாடி நீண்டகாலமாகத் தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது.

Tags: bjp k annamalaibjp protest
ShareTweetSendShare
Previous Post

விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 31.31 அடியாக அதிகரிப்பு!

Related News

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies