தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 31.31 அடியாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 163 கன அடியிலிருந்து இன்று 2,528 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 30.90 அடியிலிருந்து இன்று காலை 31.31 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 8.05 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.