மதுரை விமான நிலையத்தில், 24 மணி நேரம் சேவையும், சர்வதேச விமான சேவையும் கொண்டு வருவது குறித்து விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில், விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினர்கள், விமான நிலை இயக்குவனர் முத்துகுமார், முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், மத்திய தொழீல் பாதுகாப்ப படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். இருதரப்பு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களைக் கூடுதலாக நியமிக்கவும், விரிவாக்க பணிகளைத் விரைவாக நடத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாரத்திற்கு மூன்று நாட்கள் மதுரையிலிருந்து சிங்கப்பூர் விமான சேவை இயக்கப்படுகிறது. அக்டோபர் 22 முதல் ஏர் இந்தியா நிறுவனம், தினசரி சேவை தொடங்க உள்ளது.