திருமணம் என்ற பெயரில் ஒரு சில இஸ்லாமிய குற்றவாளிகளின் மோசடியான திருமணத்தை தடுக்கும் வகையில் ஆதார் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து சார்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதுச்சேரி மாநிலம், முத்தையா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷபான் (36). பி.சி.ஏ பட்டதாரியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், கணவரை விவாகரத்து செய்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை தான் மறுமணம் செய்து கொள்வதற்காக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த அந்த முஸ்லிம் தனது நாடக காதல் லீலையை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பிடுங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு செய்வினை உள்ளதாகவும் அதனை மசூதியில் வைத்து செய்தி சரி செய்வதாகவும் அதற்கு அதிக நகைகள் பணங்கள் வேண்டும் என்று 405 பவுன் தங்க நகையை வாங்கி சென்று விட்டு அந்தப் பெண்ணை ஏமாற்ற முடிவு செய்துள்ளான்.
சரியான நேரத்தில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தற்பொழுது அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சமீப காலங்களில் லவ் ஜிகாத் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் இந்து இளம் பெண்கள் திருமணம் ஆன ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களை குறி வைத்து பணத்தை பிடுங்குவதும் அவர்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி மதம் மாற்றுவதும் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்வதும் வாடிக்கையாக்கி வந்துள்ளது
திருமணம் செய்பவர்கள் முறையாக தனது ஆதார் அட்டையை வைத்து பதிவு செய்வது இல்லை இதனால் அவர்கள் எத்தனை திருமணம் செய்கிறார்கள் என்று அரசாங்கத்திற்கு தெரிவதில்லை இது போன்ற சமூகத்தை பாதுகாக்கும் சட்டங்கள் தமிழக அரசும் மத்திய அரசும் இயற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
மேலும் இந்து பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.