இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் பணக்காரர்கள் குறித்த பெயர் பட்டியலை 360 ஒன் வெல்த் ஹருன் 2023 அமைப்பு (360 ONE Wealth Hurun India Rich List 2023) வெளியிட்டுள்ளது .இதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கெளதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ரூபாய் 8.08 இலட்சம் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அதானி குழும தலைவர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூபாய் 4.7 இலட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சீரம் நிறுவனத் தலைவர் சைரஸ் பூனாவாலா ரூபாய் 2.78 இலட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 4-வது இடத்திலும், தொழிலதிபர் கோபிச்சந்த் இந்துஜா 5-வது இடத்திலும், சன் பார்மா தலைவர் திலீப் சங்வி 6-வது இடத்திலும், தொழிலதிபர் இலட்சுமி மிட்டல் 7-வது இடத்திலும், ட்மார்க் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தமனி 8-வது இடத்திலும், ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 9-வது இடத்திலும், தொழிலதிபர் நிராஜ் பஜாஜ் 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.