மேரா யுவ பாரத் என்கின்ற எனது இளையபாரதம் என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் தலைமை தாங்கும் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு பரந்த நடைமுறையாக செயல்படவும், இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அரசின் அனைத்துத் தரப்பிலும் வளர்ந்த பாரதத்தை உருவாக்கவும், சமமான அணுகலை வழங்குவதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் (எம்.ஒய் பாரத்) எனும் எனது இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேரா யுவ பாரத்தின் முதன்மை நோக்கம், அதனை இளைஞர்களின் மேம்பாட்டிற்கான ஒரு முழு அரசுத் தளமாக மாற்றுவதாகும். புதிய ஏற்பாட்டின் கீழ், வளங்களை அணுகுதல் மற்றும் வாய்ப்புகளுக்கான இணைப்புடன், இளைஞர்கள் சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை உருவாக்குபவர்களாகவும் மாறுவார்கள். இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்த முயல்கிறது.
அதிவேகத் தகவல்தொடர்புகள், சமூக ஊடகங்கள், புதிய டிஜிட்டல் வாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் சூழலைக் கொண்ட வேகமாக மாறிவரும் உலகில், ‘முழு அரசு அணுகுமுறை’ என்ற கொள்கைகளால் வழிநடத்தப்படும் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அரசு ஒரு புதிய தன்னாட்சி அமைப்பின் வடிவத்தில் அதாவது மேரா யுவ பாரத் என்ற பெயரில் பரந்த அளவிலான நடைமுறையை நிறுவ முடிவு செய்துள்ளது.