மகாளய அமாவாசை: சதுரகிரி செல்ல இன்று முதல் அனுமதி!
Mar 15, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாளய அமாவாசை: சதுரகிரி செல்ல இன்று முதல் அனுமதி!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு மகாளய அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, இன்று முதல் 15-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 14-ஆம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15-ஆம் தேதி வரை சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கும் அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனுமதி வழங்கப்பட்டுள்ள நான்கு நாட்களும் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதேபோல, நவராத்திரி வழிபாட்டுக்காக 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை உள்ள மூன்று நாட்களும், ஐப்பசி மாத பௌர்ணமி வழிபாட்டை முன்னிட்டு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உள்ள நான்கு நாட்களும் பக்தர்கள் மலையேறலாம்.

மகாளய அமாவாசைக்கு நான்கு நாட்கள், நவராத்திரிக்கு மூன்று நாட்கள், ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டுக்கு நான்கு நாட்கள் என இந்த மாதத்தில் மொத்தம், 11 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags: Mahalaya Amavasi: Permission to go to Chaturagiri from today!
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

ஜெகத்தும் 1,000 கோடியும் – தலைச்சுற்றும் ஐ.டி.

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies