ஜெகத்தும் 1,000 கோடியும் - தலைச்சுற்றும் ஐ.டி.
Mar 15, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகத்தும் 1,000 கோடியும் – தலைச்சுற்றும் ஐ.டி.

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டுக்குள் சோதனைக்காகச் சென்ற வருமானவரித்துறையினர் தற்போது வரை தலைசுற்றிப்போய் உள்ளனர்.

காரணம், ஜெகத் தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 -ம் தேதி சாதாரணமாக சோதனையைத் தொடங்கினர். ஆனால், 10-ம் தேதி வரை 5 நாட்கள் வரை சல்லடை போட்டுச் சலித்தனர்.

எவ்வளவு ரொக்கம், எவ்வளவு ஆவணங்கள் என வருமான வரித்துறை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதேபோல, ஜெகத்ரட்சகன் தரப்பும் வாயே திறக்கவில்லை. ஆனால், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், நிலப் பத்திரங்கள், ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்தான், ஜெகத் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது வருமானவரித்துறை. அதுமட்டுமல்ல, கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் ஆவணங்களைச் சரி பார்க்க டெல்லியிலிருந்து 10 சிறப்புக் குழு வந்துள்ளதாம்.

இதனிடையே, வருமானவரித்துறையுடன் அமலாக்கத்துறையும் கைகோர்த்துள்ளதுதான் தற்போது ஹாட் டாபிக். ஜெகத் தரப்பில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக உறுதியாக நம்பும் அமலாக்கத்துறை அதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால், அடுத்து சில நாட்களிலேயே அமலாக்கத்துறை தனது வேலையைக் காட்டத் துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்த ஜெகத், வழுதாவூரில் பள்ளியில் படித்தார். ரயில்வே ஊழியராகத் தனது வாழ்கையைத் துவங்கியவர். சொற்ப நாட்களில் லட்சாதிபதி ஆனார். பின்னர் கோடீஸ்வரராக மாறினார். தற்போது மல்டி மில்லியனராக உள்ளார்.

இது எல்லாம் குறுகிய காலத்தில், எப்படி சாத்தியம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு விடை காண விரைவில் களம் இறங்கப்போகிறது அமலாக்கத்துறை.

Tags: jagathratchagan dmkED RAID
ShareTweetSendShare
Previous Post

மகாளய அமாவாசை: சதுரகிரி செல்ல இன்று முதல் அனுமதி!

Next Post

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா : வெல்லப்போவது யார் ?

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies