உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் அப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன.
இன்று நடைபெறும் நடைபெறும் 10வது லீக் ஆட்டம் உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதேபோல் கடந்த 7ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் , வேன் டர் துசன் மற்றும் எய்டன் மார்க்ராம் ஆகியோர் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். அதேபோன்ற கூட்டணி இன்றைய ஆட்டத்திலும் அமைந்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்படலாம். அதேப்போல் கேப்டன் தேம்பா பவுமா நன்றாக செயல்படும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 400 ரன்களை எட்டும் என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் வரிசை, பலவீனமாக உள்ளது. கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதேபோல் சுழற்பந்துவீச்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பலவீனமாக உள்ளனர். மற்றபடி ஆஸ்திரேலியாவும் நெருக்கடியான சூழலையும் சமாளித்து விளையாடக் கூடிய நல்ல அணிதான். முதல் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது வெற்றிக்காக தென் ஆப்பிரிக்க அணியும் இன்றைய ஆட்டத்தில் மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 58 சதவீதமும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு 42 சதவீதமும் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.