இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து இரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
1. நேற்றைய ஆட்டத்தில் எதிரும் புதிருமாக இருந்த விராட் கோலியும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும், திடீரென சிரித்துக் கொண்டே நட்பு பாராட்டிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் சண்டை போட்ட அண்ணனிடம் போய் பேசும் விஜய் சேதுபதி, “நாகராஜ் அண்ணே.. எப்படினே இருக்க” என்பார். அதுபோல் விராட் கோலி நவீனிடம், “என்ன நவீன்னு.. எப்படி இருக்க” என்று உருவாக்கப்பட்டுள்ளது.
2. கடந்த சில மாதங்களாக ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஒரு காலத்தில் எப்படி இருந்த பேட்ஸ்மேன், இப்போ இப்படி ஆகிட்டாரேனு ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பழைய ரோகித் சர்மா வெளி வந்தார். அவர் சதம் விளாசிய போது விராட் கோலி எழுந்து நின்று கைதட்டினார். இதனை கோமாளி படத்தில் ஜெயம் ரவியை கைதட்டி வா மச்சா.. வா மச்சா என்று பாராட்டுவார் யோகி பாபு. அதுபோல் விராட் கோலி பாராட்டியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
3. நேற்றைய ஆட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ், உலகக்கோப்பையில் அதிக சதம், உலகக்கோப்பை அதிக வேக சதமடித்த இந்திய வீரர், உலகக்கோப்பையில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் சேர்த்த வீரர் என்ற ஏராளமான சாதனைகளை ரோகித் சர்மா படைத்தார். இதனை பேட்ட படத்தின் ரஜினியாக ரோகித் சர்மா, “பேசுன வாயெல்லாம் அந்தந்த இடத்துல அப்படியே நிக்கனும்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.
4. நேற்று மொத்தமாக 84 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 16 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 131 ரன்களை விளாசி தள்ளினார். இதனை 83 படத்தில் ஜீவா சொல்லும், எனக்கு இந்த டுப்பு டுப்பு கிரிக்கெட்லாம் ஆட வராது என்று சொல்லுவார். நேற்றைய ஆட்டத்திலும் ரோகித் சர்மா ஆடிய ஆட்டம் அப்படிதான் இருந்தது.
5.டெல்லி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்று இந்திய வீரர் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது பும்ராவின் மரண மாஸ் கம்பேக்காக அமைந்தது. இதனை பாட்ஷா படத்தின் இடைவேளையில் ரஜினியின் இண்ட்ரோவுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.