தமிழகத்திற்கு மத்திய அரசு, 50 ஆண்டுகள் வட்டி இல்லாத கடனாக ரூ.7042 கோடி வழங்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் அவர்கள் பொதுவெளியில் ஒரு செய்தியை சொல்லும் முன்பு முழுமையாக ஆராய வேண்டும். தமிழ்நாட்டுக்கான வரிப்பகிர்வு 2004-2014ல் ரூ.94,977 கோடியில் இருந்து 2014-2024ல் (2023 ஜூலை வரை) ரூ. 2.59 லட்சம் கோடியாக (173% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது.
திமுக தலைவர் அவர்கள் பொதுவெளியில் ஒரு செய்தியை சொல்லும் முன்பு முழுமையாக ஆராய வேண்டும்.
தமிழ்நாட்டுக்கான வரிப்பகிர்வு 2004-2014ல் ரூ.94,977 கோடியில் இருந்து 2014-2024ல் (2023 ஜூலை வரை) ரூ. 2.59 லட்சம் கோடியாக (173% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கான உதவி தொகை… https://t.co/RFi714STOs
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 12, 2023
தமிழ்நாட்டுக்கான உதவி தொகை 2004-14ல் ரூ.57,924 கோடியாக இருந்தது. 2014-23 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்து ரூ.2.30 லட்சம் கோடியாக உள்ளது.
2020-21 நிதியாண்டு முதல்,(2023 ஜூன் நிலவரப்படி) தமிழ்நாட்டிற்கு மூலதன செலவு திட்டங்களுக்கு உதவும் வகையில் 50 ஆண்டுகள் வட்டி இல்லாத கடனாக ரூ.7042 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திமுக அங்கம் வகித்த UPA கூட்டணி ஆட்சியுடன் (தற்போது INDI கூட்டணி) ஒப்பீடும் போது தமிழகத்திற்கு இரண்டு மடங்கு நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக பாஜக தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.