திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பிரபல ரவுடி முத்து சரவணனை காவல்துறையினர் என்கவுன்டர் செய்ததில் ரவுடி முத்து சரவணன் உயிரிழந்தார்.
பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் பிரபல ரவுடி முத்து சரவணன். இவர் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் – புதூர் மாரம்பேடு பகுதியில் பிரபல ரவுடி முத்து சரவணனை காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர்.
பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணனை பிடிக்கக் காவல் துறையினர் முயற் மேற்கொண்டனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக முத்து சரவணனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதில் காயமடைந்த மற்றொரு ரவுடியான சதீஷ், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை, ஊரப்பாக்கம் அருகே 2 ரவுடிகளை காவல்துறையினர் என்கவுன்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.