உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 312 ரன்கள் இலக்கு.
ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லக்னோவில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
இதில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் சதம் விளாசி மொத்தமாக 106 பந்துகளில் 109 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தேம்பா பாவுமா 55 பந்துகளில் 35 ரன்களுடனும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 30 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விசிக்கெட்கள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்களும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றிப் பெற 312 ரன்கள் இலக்காக உள்ளது.