ஹமாஸ் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில் பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் விரைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார். அப்போது, அவர் இஸ்ரேலுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என உறுதி அளித்துள்ளார்.
பின்னர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ”ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும்” என தெரிவித்தார்.
செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்கு நாங்கள் துணையாக இருப்போம். ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். இந்த சூழலை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக ராணுவ உதவி வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ராணுவ ஆதரவின் முதல் கப்பல்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு வந்துவிட்டன எனக் கூறினார்.