தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 35.98 அடியாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிகுண்டு, ஒகேனக்கல், மேட்டூர் உள்ளிட்ட தமிழக எல்லை பகுதியில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,606 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 34.30 அடியிலிருந்து இன்று காலை 35.98 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 10.11 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.