உலகளவில் சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இந்தியாவில் சினிமாவை எமோஷனலாக பார்ப்பவர்கள் உண்டு. அதனால் தான் உலகிலேயே அதிகம் சினிமா தயாராகும் நாடாக இந்தியா விளங்குகிறது.
அதுமட்டுமின்றி சினிமா மீது இருக்கும் மோகத்தின் காரணமாக பலர் தங்களது வாழ்க்கையை சினிமாவுக்காகவே அர்பணிக்கின்றனர். இந்திய அளவில் இப்படியென்றால் தமிழ்நாட்டில் ஒருபடி மேலே இருக்கும். சினிமாவையும், சினிமாக்காரர்களையும் தங்களின் ஒரு பகுதியாகவே பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.
தனக்கு பிடித்த இரசிகர்களின் படம் வெளியானால் அன்றைய நாள் அவர்களுக்கு திருவிழாவாக தான் இருக்கும். பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து, நடனம் ஆடி, முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று படம் பார்ப்பர்.
இப்படி சென்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் உலகில் மிக பெரிய தொற்று நோய் பரவியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், சினிமா தியேட்டர் என அனைத்தும் மூடப்பட்டும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.
பின்னர் தோற்றுக் குறைந்து வரும் காலகட்டத்தில் மக்கள் வெளியப் போக பயந்தனர். இருப்பினும் திரையரங்கம் போக சிறிதும் தயங்காமல் சினிமா மீது வைத்துள்ள தங்களின் காதலை வெளிப்படுத்தினர்.
இதனை கண்ட மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, தேசிய சினிமா தினத்தை அறிவித்திருந்தது. மேலும் இரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாக இன்றைய நாளில் மல்டிபிளக்ஸ்களில் சினிமா பார்க்க கட்டணம் ₹99 ஆக நிர்ணயப்பட்டுள்ளது.
இதனால் சினிமா காதலர்கள் மிகவும் உற்சாகத்தில் இந்த நாளை கொண்டவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.