அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது: இஸ்ரேல் பிரதமரிடம் லாயிட் ஆஸ்டின் உறுதி!
Sep 9, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது: இஸ்ரேல் பிரதமரிடம் லாயிட் ஆஸ்டின் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், தலைநகர் டெல் அவிவில் கூறுகையில், ​இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது என்று கூறினார்.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் காஸா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கிய முதல் நாளே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது நாசக்காரப் போர்க்கப்பலையும் இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். அப்போது, “உங்களை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. போர்ச்சூழலைப் பயன்படுத்தி யாராவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், நாங்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இதுதான் நான் கொண்டு வந்திருக்கும் செய்தி” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேல் வந்தடைந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் லாயிட் வெளியிட்டிருக்கும் பதிவில், “டெல் அவிவ் நகருக்கு வந்தடைந்தேன். இன்று இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவு இரும்புக் கவசமானது என்பதை நிரூபிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர் யாவ் கேலன்ட் மற்றும் பிற மூத்த தலைவர்களைச் சந்தித்து, பாதுகாப்புத் தேவைகள் குறித்து நேருக்கு நேர் பேசுவேன். நாங்கள் இஸ்ரேல் மக்களுடன் நிற்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யாவ் கேலன்ட் மற்றும் இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினர்களை ஆஸ்டின் சந்தித்தார். ஆஸ்டின் வருகையை மேற்கோள்காட்டி அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஆதரவில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இந்த மோதலையும், போரையும் பயன்படுத்தி வேறு எந்த நாடாவது வன்முறையை அதிகரிக்கத் திட்டமிட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், அமெரிக்கா இப்பகுதியில் தனது படை பலத்தை அதிகரிப்பதுடன், இஸ்ரேலுக்கு இராணுவ உதவிகளையும் அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஆஸ்டின் கருத்துப்படி, இந்த வாரம் உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழுவின் 16-வது கூட்டத்தை கூட்டினார். மேலும், பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், இஸ்ரேலுக்கு உதவுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை ஆஸ்டின் மீண்டும் வலியுறுத்தினார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்டன், இன்று பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருடன் இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelAmerican defence secretary
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37.0% ஆக உயர்வு!

Next Post

சென்னை-குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies