ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் 11 வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 11 வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுச் செய்தார். இதன் படி முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்தது.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
தன்சித் ஹசன் 8 வது ஓவரில் 17 பந்துகளுக்கு 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மெஹிடி ஹாசன் 46 பந்துகளில் 30 ரன்களையும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 8 பந்துகளுக்கு 7 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் வங்கதேச அணியின் ஸ்கோர் 54 ஆகா இருந்தது. இந்த சமயத்தில் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். இவர் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து 51 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து அணிக்கு மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக முஷ்பிகுர் ரஹீம் களமிறங்கினார். இவர் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 175 ஆகா இருந்தது.
வங்கதேச அணி 200 ரன்களை கடக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மஹ்முதுல்லாஹ் களமிறங்கினார். இவருடன் ஸ்ட்ரைக்கில் இருந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மஹ்முதுல்லாஹ்
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 49 பந்துகளில் 41 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும், மாட் ஹென்றி மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரன் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ரவீந்திரா 13 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி வந்தார்.
டெவோன் கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு கான்வே 59 பந்துகளில் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 78 ரன்களை எடுத்த பின்னர் ரிட்டைட் ஹுர்ட் மூலம் வெளியே சென்றார். இவரை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் களமிறங்கினர்.
டேரில் மிட்செல் 67 பந்துகளில் 89 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 11 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 43 வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடியது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 10 ஓவர்களில் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய லாக்கி பெர்குசன்னுக்கு வழங்கப்பட்டது.