மகளிர் உரிமை மாநாடு எதற்காக - ரகசியத்தை உடைத்த வானதி சீனிவாசன்
Jun 1, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகளிர் உரிமை மாநாடு எதற்காக – ரகசியத்தை உடைத்த வானதி சீனிவாசன்

Web Desk by Web Desk
Oct 14, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு அல்ல, மகளிர் வாரிசு உரிமை மாநாடு, தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நாடகம் என, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்றத் உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மகளிரணி சார்பில் சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசியல் வாரிசுகள். மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மகளிர் வாரிசு உரிமை மாநாட்டை நடத்துகின்றனர்.

வாரிசு அரசியலில் கூட, பெண்களை பின்னுக்குத்தள்ளி, தங்கள்து ஆண் வாரிசுக்குதான் முக்கியத்துவம் அளிப்பதுதான் இண்டி கூட்டணி கட்சிகளின் அரசியல் பாரம்பரரியம். நீண்டகால அரசியல் அனுபமும், திறமையும் கொண்ட கனிமொழி, திமுகவில் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கு உள்ளேயே தனது உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். மகள் இருந்தும் மகன் உதயநிதியை தான் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அரசியல் வாரிசாக்கியுள்ளார்.

பாஜக ஆட்சியில் தான் பெண்களின் கனவான நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் கழிவறை திட்டம், வீடுகள்தோறும் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், வீடுகள்தோறும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, வீடுகள்தோறும் மின் இணைப்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அடிப்படை வசதிகள் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியில் தான் சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டங்களால் பெண்களுக்கு பெரும் விடுதலை கிடைத்துள்ளது. அவர்களின் கெளரவம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல், வீட்டிலேயே முடங்கியிருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் மோடி அமைச்சரவையில்தான் 11 பெண்கள் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். 140 கோடி மக்களின் வரவு – செலவுகளை கவனிக்கும் நிதி அமைச்சராக பெண் தான் இருக்கிறார். இப்படி மகளிர் உரிமையை செயலில் காட்டியிருக்கிறது மோடி அரசு. 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் மகளிர் உரிமைக்காக எதுவும் செய்யாமல், தேர்தல் வருகிறது என்றதும் மகளிர் உரிமை மாநாடு என நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கி விட்டார். இனி எந்த நாடகமும் பெண்களிடம் எடுபடாது.

“அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்காமல், மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறார்கள்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி இருக்கும் வரை காவிரி பிரச்னை இல்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் காவிரி பிரச்னை வந்து விட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மறுக்கிறார்கள். அவர்கள் இருவரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். சென்னை வந்துள்ள சோனியா, பிரியங்காவிடம், காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உதவுமாறு முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி வலியுறுத்துவார்களா? தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்து விட்டு,, மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறது திமுக.

இன்று திமுக நடத்துவது மகளிர் உரிமை மாநாடு அல்ல. மகளிர் வாரிசு உரிமை மாநாடு. தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் நாடகம் என, வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

Tags: vanathi srinivasan bjpwomen bil;
ShareTweetSendShare
Previous Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

Next Post

ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இவ்வளவுதானா? – நிஜ நிலவரம்

Related News

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலா துறை நிதியுதவி – கே.சுரேந்திரன் குற்றச்சாட்டு!

நள்ளிரவில் சென்று பந்தல்குடி கால்வாயை பார்வையிடும் நாடகம் யாரை ஏமாற்ற முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

டெல்லியில் தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் தரைமட்டம்!

வெற்றிக்காக மட்டுமல்ல, விடாமுயற்சி மற்றும் தீவிர அர்ப்பணிப்புக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்  தமிழ்மகள்  வித்யா ராம்ராஜ் – நயினார் நாகேந்திரன்

திருச்சியில் திருடர்கள் குறித்து தகவல் அளித்த வீட்டு உரிமையாளர் – கோட்டை விட்ட போலீஸ்!

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே ஸ்கிப்பிங் கயிற்றால் மகனை தாக்கிய மதபோதகர் கைது!

சிவகங்கை கல்குவாரியில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தமிழக முதல்வருக்கு முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழ் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!

ஒன்றிய அரசு என்பதே தவறு, மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? – சிபி.ராதாகிருஷ்ணன் கேள்வி!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்கால ஒத்திகை!

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா – எராளமானோர் பங்கேற்பு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – மேட்டுப்பாளையத்தில் அழைப்பிதழ் கொடுக்கும் பணி தொடக்கம்!

வத்தலகுண்டு அருகே சாலை அமைக்க கோரியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – 24 பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies